அமெரிக்கா சென்றடைந்தார் மோதி; நாளை டிரம்புடன் சந்திப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

மூன்றுநாள் சுற்றுப்பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்காவுக்கு சென்றடைந்துள்ளார்.

முதல் நாள் சுற்றுப்பயணத்தின் போது, கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் உள்பட அமெரிக்காவின் தொழில் துறை தலைவர்களையும், பின்னர் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களையும் சந்திக்க உள்ளார்.

இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய சந்திப்பு திங்கட்கிழமை நடைபெறுகிறது. அப்போதுதான் அதிபர் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோதி சுமார் ஐந்து மணி நேரங்களை கழிக்க உள்ளார்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாகம் பொறுப்பேற்றவுடன், இரவு விருந்து ஒன்றில் கலந்து கொள்ளும் முதல் வெளிநாட்டு தலைவர் மோதி ஆவார்.

பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்த விஷயங்கள் விருந்தின்போது நடைபெறும் விவாவத்தில் முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிபிசியின் பிற செய்திகள்:

பாகிஸ்தானில் டாங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: 123 பேர் பலி

அடுத்தடுத்து 2 சூப்பர் சீரீஸ் பட்டங்கள் வென்று கிடாம்பி ஸ்ரீகாந்த் சாதனை

உத்தரப் பிரதேசத்தில் அமையும் டெல்லியின் 2-ஆவது சர்வதேச விமான நிலையம்

மூளையில் காயம்பட்டும் தூரிகை ஏந்தும் அதிசய மனிதர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்